நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எடுத்த காலை பின் வைக்காதே

Eduththa Kaalai Pin Vaikkaathae

Moses Rajasekar

எடுத்த காலை பின் வைக்காதே

உன்னை அழைத்த தேவனே

மறந்து போகாதே – 2

பதறி விடாதே பதட்டப்படாதே – வாழ்வில்

பதறினால் சிதறிடுவாயே – எடுத்த காலை

தேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம்

கிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமே நஷ்டம்

இழந்து விடாதே மதியை இழந்து விடாதே

இழந்து விடாதே மதியை இழந்து விடாதே

– எடுத்த காலை

உலகம் காட்டும் பாசம்

அழிந்து போகும் வேஷம்

இயேசு காட்டும் பாசம்

மோட்சம் கொண்டு சேர்க்கும் – 2

இலக்கை நோக்கி ஓடு வேகமாக ஓடு – 2

ஜீவகிரீடம் பெறும்வரை ஓய்ந்து விடாதே

– எடுத்த காலை