பாடல்
அடித்த கரம் உன்னை தேற்றிடும்
Atiththa Karam Unnai Thaettidum
அடித்த கரம் உன்னை தேற்றிடும்
அன்பின் ஜனமே கலங்காதே
ஆறுதல் உன்னை நிரப்பிடும்
இலங்கை ஜனமே திகையாதே – 2
இமைப்பொழுதும் உன்னை
மறந்த தேவன்
இனிமேலும் உன்னை
மறப்பதில்லை – அடித்த
அகதியாய் போன ஜனங்களெல்லாம்
மீண்டும் வீடு வருகின்றது
எனது கண்கள் பார்க்கின்றதே
எனது வாஞ்சை பெருகின்றதே
– அடித்த
உலர்ந்து போன எலும்பெல்லாம்
உயிர் பெற்று சேனையாய்
எழுந்தது போல்
அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே
தேசம் ஜனங்களால் நிரம்பட்டுமே
– அடித்த
பாழாய் போன கிராமங்களெல்லாம்
மகிமை நிறைந்த பட்டணங்களாய்
மாறும் நேரம் வருகின்றதே
மன்னவன் இயேசு மாற்றுகின்றார்
– அடித்த