நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அடிமையல்ல இனி தனிமையல்ல

Atimaiyalla Ini Thanimaiyalla

Lucas Sekar

அடிமையல்ல இனி தனிமையல்ல (2)

தேவன் உன்னோடு இருக்கிறார் (2)

தனிமையல்ல இனி தனிமையல்ல

தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் (2)

தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் (2)

நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் (2)

– தனிமையல்ல

தாயின் கருவினிலே உருவாகும் முன்னே

பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை (2)

தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (2)

எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் (2)

– தனிமையல்ல

பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும்

பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் (2)

உள்ளம்கையிலே உன்னை வரைந்தவர் (2)

ராஜ முடியாக கையிலே வைத்துக் கொள்வார் (2)

– தனிமையல்ல