அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே
Aththimaram Thulir Vittathu Vasantha Kaalamae
Sirkali Yesuprakasam
அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே
ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே
இயேசு வருகையின் நேரமே
நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார்
இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களிட்ன் செய்தி கேட்டிடுதே
வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார்
இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே
கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது
காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது
கர்த்தரின் வருகை நிற்காது(3) –
அத்திமரம்
கொள்ளை நோய்களும் கொலைவெறியும்
கூக்குரல் கேட்கும் என்றார்
இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும்
கூக்குரல் கேட்டிடுதே
பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார்
இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே
கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது
காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது
கர்த்தரின் வருகை நிற்காது(3) –
அத்திமரம்
கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும்
கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே
கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும்
கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு
வஞ்சித்து வாழ்வார் என்றாரே
கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது
காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது
கர்த்தரின் வருகை நிற்காது(3) –
அத்திமரம்