அதிகாலை துயில் எழுந்து
Athikaalai Thuyil Elunthu
Moses Rajasekar
அதிகாலை துயில் எழுந்து
ஆண்டவரின் பாதம் பணிந்து
அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்
குளித்து எண்ணெய் பூசி
தெய்வீக உடையணிந்து
ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 நான்
ஜெபக்களம் சென்றிடுவேன் – 2
– அதிகாலை
விடியலில் விரைந்தெழுந்து
விண்ணவரின் முகம் காண – 2
கன்மலை மேல் வந்து காத்திருப்பேன்
தேவனின் பாதம் அமர்ந்து
உபவாச தவம் இருந்து
உன்னதர் புகழ் பாடுவேன் – நான்
உன்னதர் புகழ் பாடுவேன் – 2
– அதிகாலை
கடந்திட்ட நாட்கள் எல்லாம்
கரம் தன்னில் தூக்கிக் கொண்டு
சுமந்திட்ட விதம்தனை நினைத்திடுவேன்
இருந்திட இடம் தந்து
அருந்திட உணவு தந்து – (2)
அணிந்திட ஆடை தந்தீரே – என்னை
சுகமுடன் வாழ வைத்தீரே
– அதிகாலை
இனி வரும் நாட்களெல்லாம்
கனிதரும் நல்மரமாய் – (2)
திகழ்ந்திட அருள்புரிந்து வரம் தரணும்
வாழுகின்ற நாட்கள் எல்லாம்
உமக்காகவே வாழ்ந்து – (2)
பரலோகம் வந்து சேரணும் – நான்
பரலோகம் வந்து சேரணும் – 2
– அதிகாலை