அருகினில் வந்தேனே நான் என்னை ஆசீர்வதித்திடுமே
Arukinil Vanthaenae Naan Ennai Aaseervathiththidumae
Moses Rajasekar
அருகினில் வந்தேனே நான்
என்னை ஆசீர்வதித்திடுமே
சுடரொளிப் பட்டயமே
என் வாழ்வில் சுடர்விட வந்திடுமே
ஆதியாய் அந்தமாய்
அல்பாவாய் ஒமேகாவாய்
ஆதியில் வந்தவரே
அண்டினோர் வாழ்வில் இன்பம் தரும்
என்னரும் பெருமானே
இருண்ட மனிதனின் வாழ்வினிலே
ஜோதியாய் திகழ்பவரே
திரண்டு வந்திடும் பக்தர்களின்
குறைகள் தீர்ப்பவரே – 2
தேவனே என் ராஜனே
என் அன்பனே என் இன்பனே
உம் அன்பையே என்றும் பாடுவேன்
உம் புகழையே எடுத்துச் சொல்வேன்
– அருகினில் (2)
சேரக்கூடாத ஒளியினிலே
என்றும் வாசம் செய்பவரே
தேடி வந்திருக்கும் எங்களுக்கு
உம் தரிசனம் தருவீரே
நாடி வந்திடும் யாரையும் வெறுத்துத் தள்ளாத தேவனே
கூடி வந்திருக்கும் எங்களுக்கு உம் தரிசனம் தருவீரே – 2
நல்லவரே வல்லவரே
கருணையே கருணாமூர்த்தியே
நித்தியனே நிமலப்பாதனே
சற்குருவே உம் பாதம் சரணமே
– அருகினில் (2)