நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அற்புதர் அற்புதர் அற்புதர்

Arputhar Arputhar Arputhar

அற்புதர் அற்புதர் அற்புதர்

அற்புதர் இயேசு அற்புதர்

அண்டினோர் வாழ்வை இன்பமாய்

மாற்றும் இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்

எத்தனை துன்பங்கள் நம்மில்

வந்த போதும் மீட்ட இயேசு அற்புதர்

என்னென்ன தொல்லைகள்

நம்மைச் சூழ்ந்த போதும்

காத்த இயேசு அற்புதர்

உலகத்தில் இருப்போனிலும்

எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே

உண்மையாய் அவரை தேடும்

யாவருக்கும் இயேசு அற்புதரே

– எல்லோரும்

அலைகடல் மேலே நடந்தவர்

எங்கள் இயேசு அற்புதர்

அகோரக் காற்றையும்

அமைதிப்படுத்திய இயேசு அற்புதர்

அறைந்தனர் சிலுவையிலே

ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே

ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன்

எழுந்த இயேசு அற்புதரே

– எல்லோரும்