நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே

Arputha Yesu Raajanae Uththama Mannaalanae

Moses Rajasekar

அற்புத இயேசு ராஜனே

உத்தம மணாளனே

நீரே என் ஆறுதல் … ஓ…. ஓ…

நீரே என் ஆறுதல் – (2)

என் கோட்டை என் துருகம் நான்

நம்பினவர் என் அடைக்கலம்

என் கோட்டை என் துருகம் நான்

நம்பினவர் என் அடைக்கலம்

கனவிலும் மறவேன்

நீர் செய்த நன்மைகள்

நனவிலும் மறவேன்

நீர் செய்த அதிசயங்கள் – (2)

என் ராஜா என் ரோஜா என்

தெய்வம் என் இயேசு – 2

என் ராஜா என் ரோஜா என்

தெய்வம் என் இயேசு

– அற்புத

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்

போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன் – (2)

என் அன்பர் என் இன்பர் என்

நண்பர் என் இயேசு – 3

– அற்புத

ஒருவராகப் பெரியக் காரியங்களைச் செய்பவர்

இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர் – (2)

நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்

எனக்குரியவர் என் இயேசு – 3

– அற்புத