பாடல்
அப்பாலே போ சாத்தானே
Appaalae Po Saaththaanae
Moses Rajasekar
அப்பாலே போ சாத்தானே
அப்பாலே போ … போ… போ
அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ
உன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்காது
நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டேன்
எனக்கென்றும் பயமில்லை உலகத்திலே (2)
– அப்பாலே
எத்தனை இடர்கள் வந்தாலும்
இயேசுவின் பெலன் கொண்டு முறியடிப்பேன்
காலின் கீழாக மிதித்திடுவேன்
வெற்றி சிறந்த இயேசு என்னில் உண்டு – 2
– அப்பாலே போ
வியாதிகள் வேதனை தந்தாலும் – எனக்கு
பரம வைத்தியர் இயேசு உண்டு பயமில்லையே
புயல் போல துன்பங்கள் வந்தாலும்
புகலிடமாய் இயேசு உண்டு பயமில்லையே – (2)
– அப்பாலே போ
தங்க இங்கு வீடு இன்றி போனாலும்
பரலோகில் தங்கத்தாலே வீடு உண்டு
மகிழ்ந்திடுவேன்
ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் – ஜீவ
என் நோக்கம் பரலோகம் பரலோகமே
– அப்பாலே போ