பாடல்
அப்பா இயேசு நீங்க வந்தால்
Appaa Yesu Neenga Vanthaal
Chandrasekaran
அப்பா இயேசு நீங்க வந்தால்
சந்தோஷம் எனக்கு
நீங்க இல்லாத
ஆராதனை வேண்டாமே எனக்கு
வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா
தாவீதைப்போல நடனமாடி
உம்மை உயர்த்துவேன்
தானியேல் போல் ஜெபித்து
உந்தன் பாதம் அமருவேன் – 2
பலகோடிகோடி நாவுகள்
உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு
முடங்கி பணிந்திட – 2
– வாருங்கப்பா
உம்மை நான் ஆராதித்தால்
தோல்வி எனக்கில்லை
உம்மை நான் ஸ்தோத்தரித்தால்
தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான்
என்னத்தை செலுத்துவேன்
நாள் முழுவதும்
உம் பாதம் தொழுது மகிழ்வேன்
– வாருங்கப்பா
உயிரோடு இருக்கும் வரை
உம்மை பாடுவேன்
உந்தன் நாமம் உயர்த்திடவே
உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் தான்
ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திரபலிகள்
செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்
– வாருங்கப்பா