பாடல்
அப்பா உம் கிருபைகளால் என்னை
Appaa Um Kirupaikalaal Ennai
Pastor K. S. Wilson
அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்து கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே
தாங்கி நடத்தும் கிருபை இது
தாழ்வில் நிலைத்த கிருபை இது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபை இது
– அப்பா
என்னை நினைக்கும் கிருபை இது
என்னை நடத்தும் கிருபை இது
தந்தையைப் போல் தோளில் சுமந்து
என்னை நடத்தும் கிருபை இது
– அப்பா
வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிடும் கிருபை இது
– அப்பா
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை
– அப்பா