நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அப்பா நீங்க செய்த நன்மை

Appaa Neenga Seytha Nanmai

Chandrasekaran

அப்பா நீங்க செய்த நன்மை

அது கோடி கோடி உண்டு

நினைத்துப் பார்க்கும் உள்ளம்

அது எனக்கு இல்லையே

நினைத்துப் பார்க்கும் உள்ளம்

அது எனக்கு வேண்டுமே – 2

பாவங்கள் செய்து மரித்தேன்

ஜீவனைத்தந்தீரே

பாவங்கள் இருந்த இடத்தில்

உம் கிருபை வைத்தீரே

நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே

நன்மைகள் என்னிடம் இல்லை

ஆனால் நல்லதை செய்யவைத்தீர்

நான் உம்மை நினைக்கவில்லை

ஆனால் நீர் என்னை நினைத்தீரே

நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே

ஏழை என்னை நினைத்து

ஆசீர்வதித்தீரே

கரம் பிடித்து அன்பாய்

நடத்திச் சென்றீரே

நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

தாரும் தேவனே