பாடல்
அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்கு
Apishaeka Naathanukku Aanantha Soroopanukku
Moses Rajasekar
அபிஷேக நாதனுக்கு
ஆனந்த சொரூபனுக்கு
சரணம் … சரணம் … சரணம் … (2)
– அபிஷேக
இன்ப நல்தேவனுக்கு
இனிய நல் நாதனுக்கு (2)
துன்பம் போக்குவோனுக்கு
துயரம் நீக்குவோனுக்கு – (2)
– சரணம்
ராஜாதி ராஜனுக்கு
தேவாதி தேவனுக்கு – (2)
கர்த்தாதி கர்த்தனுக்கு
கருணை மணாளனுக்கு – (2)
– சரணம்
நித்திய தேவனுக்கு
உத்தமநல் ராஜனுக்கு – (2)
சத்திய போதனுக்கு
சரித்திரம் தந்தோனுக்கு – (2)
– சரணம்
பரலோக தேவனுக்கு
பரமநல் ராஜனுக்கு – (2)
பாசம் காட்டியே
நம்மை நேசிக்கும் தேவனுக்கு – (2)
– சரணம்
உன்னத தேவனுக்கு
உயர்ந்த நல் ராஜனுக்கு – (2)
மண்ணிலே வாழவைக்கும்
மகிமை மணாளனுக்கு – (2
– சரணம்