பாடல்
அனுப்பும் புது அக்கினியை
Anuppum Puthu Akkiniyai
Albert Solomon
அனுப்பும் புது அக்கினியை
கேளும் என் கோரிக்கையை
நெருப்பாற்றை போல உற்றிடும்
அக்கினியை
பசித்தாகத்தால் நிறைந்தோம்
ஆவலோடு பார்க்கின்றோம்
நம்பிக்கை ஊட்டும் இரக்கம் தாரும்
அக்கினியால் நிரப்பும்,
எங்கள் ஆவியை அனல்மூட்டும்
அக்கினியால் நிரப்பும்
– அனுப்பும் புது
உம் வழியை விட்டு சென்றோம்
கருத்தற்றே நின்றார்
ஆதி அன்பால் என்னை சந்தித்து அன்று…
பொழிந்தார் உம் அருளையே –
எங்கள் ஆவியை அனல்மூட்டும்
அக்கினியால் நிரப்பும்
– அனுப்பும் புது
நிறைவாய் வேண்டும் பலனும் அன்பும்
மறுமலர்ச்சி செயல்படுத்துமே
பிரகாசிக்கவும் ஆவியை ஊற்றும்
அக்கினியால் நிரப்பும், நிரப்பும்….
.– அனுப்பும் புது