நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

Anthappakkam Ennai Alaikkiraarkal

Ravi Bharath

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

இந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

Sunday Morning என்றால்

வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று

காட்டிக்கொள்ளும் நேரம் நேரம்

மற்ற நாளிலெல்லாம் பாவம் தலை தூக்கும்

இஷ்டம்போல வாழ்க்கை வேறு

திசை பறந்திடுமே ஹே ஹே ஹேஹே

மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன்

நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட

ஜெபம் செய்வேன் செய்வேன் – ஆவியின்

வரங்கள் அனைத்து பெற்றுள்ளேனே

ஆவியின் கனிகள் என்னவென்று

தெரியாதே

மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

ஆலயத்தில் நான்தான்

பரிசுத்தத்தின் எல்லை – Mary Martha கூட

என்னைப் போல இல்லை இல்லை

ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு

யாரும் அறியாத மாய்மால

வாழ்க்கை ஒன்று

மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

காலங்காலமாக Christians நாங்க மாதம்

தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க

மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே

நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே

மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

மக்கள் என்னை கண்டால்

ஸ்தோத்திரம் சொல்வதுண்டு

நல்ல பிள்ளை என்று

Certificate எனக்குண்டு

உண்மை நிலை என்ன

அவர்கள் அறியாரே

உள்ளுக்குள்ளே நானே

அழகான கல்லறையே

மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

– அந்தப்பக்கம்