நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அந்த சூரியன் அந்த சந்திரன்

Antha Sooriyan Antha Santhiran

Ravi Bharath

அந்த சூரியன் அந்த சந்திரன்

இந்த பூலோகம் யாவும் அந்த

மழைத்துளி இந்த பனிதுளி

இயற்கை அழகு யாவும்

படைப்பே உந்தன் படைப்பே அதை

நினைத்து மனம் மகிழ்ந்து

உம்மை வாழ்த்திடுவேனே

வான் முகிலும் வண்ண

மலரும் விளையாடிடும்

தேன் துளியும் தென்றல்

காற்றும் சுகந்தந்திடும்

மலைச்சாரல் சொல்லிடும்

பள்ளத்தாக்கும் பாடிடும்

நீரே தேவன்… லா லா…

எல்லாம் உன் கைவண்ணமே

– அந்த சூரியன்

மண்ணினாலே என்னையுமே

படைத்தீரே நீர்

கண்மணி போல் கருத்துடனே

காத்தீரே நீர்

விழுந்தாலும் எழுப்பி விட்டீர்

அழுதாலும் துடைத்து விட்டீர்

கண்ணீரை (2) லா லா லா

இதயத்துடிப்பும் நீரே (2)

– அந்த சூரியன்