நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்பின் உருவானவரே

Anpin Uruvaanavarae

Ravi Bharath

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே

உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே

உம்மை தானே தேடி வந்தோம் உண்மையோடே

ஐயா ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம்

அய்யா எந்நாளும் உமக்கே ஸ்தோத்திரம்

மகிமை விடுத்து மரணம் சகித்து

மந்தை காத்த மேய்ப்பன் நீரே

உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து

பேசும் தெய்வமே

– ஐயா

தூயரம் நிறைந்து அழகாய் எழுந்து

காயப்பட்ட தெய்வம் நீரே

பிரியாதிருந்த பரனாய்

பிரிந்து பாடுபட்டீரே

– ஐயா

வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்

வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே

கடமை உணர்ந்து சிலுவை சுமந்து

பாவம் தீர்த்தீரே

– ஐயா