அன்பர் அன்பை யாரால் கூறலாம்
Anpar Anpai Yaaraal Kooralaam
அன்பர் அன்பை யாரால் கூறலாம்
ஆ ஆச்சரியம் அன்பாகவே
இருக்கும் என் நேசர்
அன்பின் உயரம் நீளம் அகலம்
ஆழம் அளக்க யாரால் கூடும்!
அன்பரின் பேரன்பை இங்கு
அழ்காய் கூற யாரால் கூடும்!
எல்லா ஜலமும் மையானாலுமே
அன்பை எழுதிட – எல்லா
மரமும் பேனாவானாலுமே
ஆகாயத்தை தாளாக்கி
அதிலெல்லாம் எழுதினாலும்
அன்பின் அம்சம் எழுதித் தீர்க்க
அன்பர்கள் எங்கு தானுண்டு
– அன்பின் உயரம்
மாந்தர் மேலே பாய்ந்த
அன்பைத்தான் ஆழ்ந்து தூதரும்
பார்ப்பதில் பணிந்து குனிகிறார்
பாவி மேலே பாய்ந்த அன்பு
சாவின் கூரை ஒடித்து வென்றது
என்ன அன்பு என்ன நேசம்
மன்னர் இயேசுவின் மகத்துவ நேசம்!
– அன்பின் உயரம்
ஏழை என்னில் பாய்ந்த அன்பு தான்
ஆ! ஏராளம் ஏழை
என்னால் பகரக்கூடுமோ
அல்லும் பகலும் கூடிப்பாடி
அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து
அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்!
– அன்பின் உயரம்