பாடல்
அன்பே மாறிடா திரு அன்பே
Anpae Maaridaa Thiru Anpae
அன்பே மாறிடா திரு அன்பே
என்னை தாங்கிடும் தேவ அன்பே
மாளும் வேளை எனையும்
தேடின அன்பே
மயக்கின அன்பே அணைத்த பேரன்பே
வாழ்த்துவேன் துதியுமக்கே..
– அன்பே
பாதுகாத்தீர் அரசே
இதுவரை எனையும்
பயங்கர துன்பம் பெருகி வந்தாலும்
தாங்கினீர் அன்பினாலே..
– அன்பே
சோரும் போதும் எனக்கும்
உம் திரு முகம் காட்டி
சொல்தவறாது சொந்தம் பாராட்டி
ஜொலித்திட ஜெயமளித்தீர்…
– அன்பே
ஆழம் நீளம் உயரம்
அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென்
அன்பே ஆச்சரியமே களிப்பேன்…
– அன்பே
வானம் பூமியகலும்
அன்பது நிலைக்கும்
வார்த்தையினாலே வரைந்திடலாமோ
வானவர் அன்பதையே…
– அன்பே
பொங்குதே என்னிதயம்
புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்…
– அன்பே