நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா

Anntikkollum Theyvam Neerthaanaiyaa

Reegan Gomez

அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா

என் ஆறுதல் நாயகன் நீர்தானையா

கருவினில் கண்டவர் நீர்தானையா –என்னை

காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா

தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்

தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா

தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா

– அண்டிக்கொள்ளும்

கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா– என்

கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா

பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு

பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா

கிருபையை ஈந்ததும் நீர்தானையா

– அண்டிக்கொள்ளும்

வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை

ஒளியாக மாற்றியவர் நீர்தானையா

உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு

மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை

மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா

– அண்டிக்கொள்ளும்