நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில

Anju Kallu Kaiyila Arputhanthaan Paiyila

Moses Rajasekar

அஞ்சு கல்லு கையில

அற்புதந்தான் பையில

அதிசயந்தான் நடக்க போகுது ஜனங்க

ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2

அடிச்சான்யா தாவீது நெத்தியடி – அதில்

விழுந்தான்யா கோலியாத்து செத்தபடி – 2

ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2

முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2

எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அது

கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2

கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே – 2

ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே – 2

சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட

தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை –

2 – அஞ்சு

சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் – நீ

சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் – 2

பட்சியின் பட்சணமும் கிடைக்குமே – 2

பலவானின் மதுரமும் கிடைக்குமே – 2

ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு

எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு – 2

– அஞ்சு

சாத்தானை ஓட ஓட விரட்டணூம் அவன்

சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் – 2

சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் – 2

ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் – 2

மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார்

தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே –

2 – அஞ்சு