நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அஞ்சிடேன் ஒருபோதும்

Anjitaen Orupothum

Premji Ebenezer

அஞ்சிடேன் ஒருபோதும்

பதறிடேன் ஒருபோதும்

இகழ்ந்திடேன் ஒருபோதும்

கலங்கிடேன் ஒருபோதும்

புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்

அமர்ந்து தண்ணீரண்ட நடத்துகிறார்

என் ஆத்துமா தேற்றுகிறார்

தன் நாமத்தால் நீதிமான் ஆக்கினார்

கர்த்தர் என் மீட்பர் ஆகையால்

நான் தாழ்ச்சி அடையேன் என்றும்

அவர் எந்தன் அருகில் இருப்பதால்

நான் பதறிடேனே ஒருபோதும்

சோர்ந்திடேன் ஒருபோதும்

சலித்திடேன் ஒருபோதும்

தயங்கிடேன் ஒருபோதும்

தளர்ந்திடேன் ஒருபோதும்

மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்

என் மீட்பரோ ஜீவிக்கிறார

தினமும் என்னை பாதுகாக்கிறார்

– கர்த்தர் என் மீட்பர்