நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அனாதைகளின் தெய்வமே

Anaathaikalin Theyvamae

Ravi Bharath

அனாதைகளின் தெய்வமே

ஆதரவற்றோரின் தெய்வமே

சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே

தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே

எளியவரை உயர்த்தினீர்

சிறியவனை எழுப்பினீர்

பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே

பிள்ளைகள் இல்லா மலடியை

பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள்

நிந்தைகள் எல்லாம்

நிவிர்த்தி செய்யும் தகப்பனே

– அனாதைகளின்

சத்துவம் இல்லாத மனிதருக்கு

சத்துவத்தை அளிக்கிறீர்

பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே

திக்கற்று நிற்கும் விதவையின்

விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள்

எல்லைகள் எங்கும் தொல்லைகள்

நீக்கும் தகப்பனே

– அனாதைகளின்

ஏழையினை நினைக்கிறீர்

அழுதிடும்போதுஅணைக்கிறீர்

இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே

உடைந்து சிதறிய மனதினை

உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன்

காயங்கள் ஆற்றும் அன்றாடம்

தேற்றும் தகப்பனே

– அனாதைகளின்