நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன்

Aetta Kaalaththil Uyarththum Unthan

Moses Rajasekar

ஏற்ற காலத்தில் உயர்த்தும்

உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்கு – 2

நீதிமானை தள்ளாட வொட்டார்

காக்கும் தேவன் உறங்கமாட்டார் – 2

வாலக்காமல் தலையாக்குவார் – உன்னை

கீழாக்காமல் மேலாக்குவார் – 2

நிச்சயமாய் முடிவு உண்டு

உன் நம்பிக்கை வீண் போகாது – 2

– ஏற்ற காலத்தில்

தேவரீர் சர்வ வல்லவர் – நீர்

செய்ய நினைத்தது தடைபடாது – 2

உன்னோடு கூட இருந்து – உன்னை

கன்மலையின் மேல் உயர்த்துவார் – 2

– ஏற்ற காலத்தில்

தூதர்கள் முன் சென்று – உன்

பாதைகளை செவ்வையாக்குவார் – 2

உன் வாஞ்சைகளை நிறைவேற்றுவார்

உன்னை தலை நிமிர்ந்து நடக்க செய்வார் – 2

– ஏற்ற காலத்தில்