பாடல்
ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்
Aethaenil Thontiya Aerpaadu Pol
Chandrasekaran
ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்
இங்கும் அமையட்டுமே
தம்பதிகள் ஒன்றிணைந்து
சந்திக்கும் வேளையிலே
இல்வ்வாழ்க்கை மகிழ்ச்சியாக
வாழ்ந்திட
பிரசன்னமாகிடும் தேவனே
வாழ்விலும் தாழ்விலும்
உம்மையே சார்ந்திட
ஆசீர் கூறிட வாருமே
– ஏதேனில்
ஒற்றுமையோடு வாழ்ந்திட
ஒன்றாய் மெய் தேவா இறங்கிடும்
பூமியின் வாழ்வில்
வெற்றியாய் வாழ்ந்திட
யெகோவா நிசியே தாங்கிடுவீர்
– ஏதேனில்
பூலோக நன்மைகள் நிறைந்த
ஆசீர்வாத ஊற்றிடும் தேவனே
இவர்கள் சந்ததி
பூமியை நிரப்ப
ஆசீர்வாதம் ஈந்திடுவீர்
– ஏதேனில்