நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏதேனில் ஆதி மணம்

Aethaenil Aathi Manam

ஏதேனில் ஆதி மணம்

உண்டான நாளிலே

பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

இப்போதும் பக்தியுள்ளோர்

விவாகம் தூய்மையாம் – மூவர்

பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்

ஆதாமுக்கு ஏவாலை

கொடுத்த பிதாவே – இம்மாப்பிள்ளைக்கு

பெண்ணை கொடுக்க வாருமே

இரு தன்மையும் சேர்ந்த

கன்னியின் மைந்தனே – இவர்கள்

இரு கையும் இணைக்க வாருமே

மெய் மணவாளனான

தேவ குமாரர்க்கே – சபையாம்

மனையாளை ஜோடிக்கும் ஆவியே

நீரும் இந்நாளில் வந்து

இவ்விரு பேரையும் – இணைத்து

அன்பாய் வாழ்த்தி மெய் பாக்கயம் ஈந்திடும்

கிறிஸ்துவின் பாரியோடே

எழும்பும் வரைக்கும் – எத்தீங்கில்

நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்