பாடல்
ஏசையா நாமம் அறிந்தேன்
Aesaiyaa Naamam Arinthaen
Ravi Bharath
ஏசையா நாமம் அறிந்தேன்
ஏசையா உம் பாதம் பணிந்தேன்
உந்தன் சொல்லெல்லாம் என்றும்
உண்மை சொல்லையா
நீர் செய்யும் செயலெல்லாம்
என்றும் நல்ல செயலையா
உந்தன் சொல்லெல்லாம் என்றும்
உண்மை சொல்லையா
எந்தன் உயிரெல்லாம் என்றும்
நீரே ஐயா நீரே ஐயா
எகிப்திலே புது விதத்திலே
உம் பலத்தை வெளியிட்டீர்
விரட்டு அலைகளை விரட்டு
படைகளை விலக்கி வழிவிட்டீர்
– ஏசையா
பரத்திலே நீர் அனைத்தையும்
உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும்
நீர் அடக்கி ஆள்கின்றீர்
– ஏசையா
இரக்கமும் மனதுருக்கமும்
உம் சிறப்பு குணமைய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும்
உம் விருப்ப உணவைய்யா
– ஏசையா
மரத்திலே நீர் மரித்தது
என் வாழ்க்கை கரையேற
மரித்த பின்னே உயிர் எழுந்தது
நல் வார்த்தை நிறைவேற
– ஏசையா