பாடல்
ஏலேலோ என்று சொன்னாலே
Aelaelo Entu Sonnaalae
Moses Rajasekar
ஏலேலோ என்று சொன்னாலே
எங்க மக்க அயிலேசா போடறாங்கய்யா
ஏன்னா ஏசப்பா எங்க படகில் உண்டு
அதனால்
எங்களுக்கு பயமே இல்லை ஐயா
ஏலேலோ … அயிலசா
ஏலேலோ … அயிலசா
ஏலேலோ … அயிலசா– 3
ஏலேலோ …. ஏலோயா
அலை வந்து மோதினாலும்
கவலையே இல்லையே
புயல் வந்து அடிச்சாலும்
பயமே இல்லையே
தண்ணீரில் நடந்த கால்கள்
என்னோடு பயணம் செய்யும்
இயேசு என்னோடுண்டு
எனக்கினி பயமே இல்லை
– ஏலேலோ
இரவெல்லாம் இரைதேடி
விரயமானாலும்
கரையினில் இயேசு நிற்க
கலக்கம் இல்லையே
தட்டினில் தூங்கும் தெய்வம்
பட்டினியாய் விட்டு விடாரே
கொட்டு கொட்டி பாடிடுவேன்
குறைவை நான் மறந்திடுவேன்
– ஏலேலோ
வெள்ளம் போல் சாத்தான்
எதிரி வந்தாலும்
வல்ல நல்ல தேவன் உண்டு
கலக்கமில்லையே
அக்கினியில் நடந்த கால்கள்
அன்போடு வழி நடத்தும்
இயேசு என்னோடுண்டு
எனக்கினி பயமில்லை
– ஏலேலோ