நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய்

Ada Sompaeriyae Nee Erumpinidam Poy

Moses Rajasekar

அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய்

புத்தியை கத்துக்கோ – 2

தலைவனில்லாதிருந்தும் யாரும்

கட்டளையிடாதிருந்தும்

தன் காலத்தில் தன் பணியைச் செய்யும்

கோடைக்காலத்தில் தன் உணவை சேர்க்கும்

எறும்பு இதை கண்டு மனந்திரும்பு – 2

படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம

பாரு வீட்டுக்குள்ள கெடக்கறான்

அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான்

வாழ்க்கையை தினமும் நடத்துறான் – 2

இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்

இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்

என்று கை முடக்கி தூங்குறான் – 2

படைச்ச ஆண்டவருக்கு அவமானத்த கொடுத்து

தினமும் தான் வாழுறான் – 2

– எறும்பு

சோம்பேறி வயலு பாம்பேறி புதரு

காஞ்சொறி மூடி கெடக்குது

இடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு

பாழாகி போயி கெடக்குது – 2

வீணான தூக்கம் கொண்டு வரும்

மயக்கம் வாழ்க்கையை வீணாய் அழிக்குது

வறுமை வியாதி தரித்திரம் பசி தான்

வாட்டி தினமும் வதைக்குது – 2

– எறும்பு

போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு

சோர்ந்து போகாமல் உழைக்கணும்

சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு

நன்றி சொல்லி தினமும் துதிக்கணும் – 2

கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம்

என்பதே வாழ்க்கை ஆகணும்

எறும்பு தந்த இந்த பாடத்தை வாழ்வில்

கரும்பு கரும்பு என்று கடிக்கணும்

– எறும்பு