பாடல்
ஆயிரம் இருந்து என்ன நமக்கு
Aayiram Irunthu Enna Namakku
Sirkali Yesuprakasam
ஆயிரம் இருந்து என்ன நமக்கு தேவ
ஆலயம் ஒன்றே போதும்
நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு
நம் நாயகன் அன்பொன்றே போதும்
இயேசு நாயகன் அன்பொன்றே போதும்
காலமென்னும் ஊஞ்சலிலே
கனிவுடனே நம்மை ஆட வைத்தார்
அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார்
நல்ல பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்
வேதனை தீயால் புடமிட்டார்
தேவா ……. தேவா …… தேவா ….
கடும் சோதனையால் நல் மெருகிட்டார்
– ஆயிரம்
ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்
இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும்
ஆத்தும மீட்பு இல்லையென்றால்
அவைகளினால் ஒரு நன்மையில்லை
ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை
மனமே மனமே மனமே அந்த
அருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை
– ஆயிரம்