பாடல்
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
Aayiram Aayiram Nanmaikal
Johnsam Joyson
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபை, இரக்கம் அன்பும் கொண்டீரே (2)
நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2)
– ஆயிரம்
காலை மாலை எல்லா
வேளையிலும் என்னை
நடத்தும் கரங்கள் நான் கண்டேன்…
தேவை பெருகும் போது
சிக்கி அவிழ்த்திடாமல்
உதவும் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும்
என்னை விழாமல் காக்கும்
அன்பின் நல்ல கர்த்தரே (2)
– ஆயிரம்
மரணப்பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை
மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே (2)
– ஆயிரம்