நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு

Aaviyaanavar Namakkullae Vaasam Seyvatharku

Wesley Maxwell

ஆவியானவர் நமக்குள்ளே

வாசம் செய்வதற்கு

அந்நிய பாஷை மட்டும் தான்

அடையாளமா

அன்பு வேண்டாமா

பரிசுத்தம் வேண்டாமா

உண்மை வேண்டாமா

தேவ பயம் வேண்டாமா

திருச்சபையே மணவாட்டியே

இயேசு வருகிறார் நீ ஆயத்தமா

பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்

ஆவியானவரின் தூய்மையான கிரியை

– திருச்சபையே

குறைகூறி திரியாமல் தன்

பிழைகளை உணர்ந்திடவே

உணர்த்தி விடுவது தான்

ஆவியானவரின் கிரியை

– திருச்சபையே

துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை

தூண்டிவிடுவதுதான்

ஆவியானவரின் கிரியை

– திருச்சபையே

சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட

உந்தித்தள்ளுவது தான்

ஆவியானவரின் கிரியை

– திருச்சபையே