நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை

Aattu Iraththam Koli Iraththam Viduthalaiyillai

Moses Rajasekar

ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை – 2

மனுஷ இரத்தம் மிருக இரத்தம் விடுதலையில்லை – 2

விடுதலை தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2

இரத்தமோ இரத்தம் இயேசு இரத்தமுங்க – நமக்கு

ஜெயம் தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2

நமக்காக சிலுவையிலே சிந்தின இரத்தமுங்க

பாவ சாபம் நீக்கி நம்மை சுத்திகரிக்குமுங்க – 2

ஜீவ இரத்தமுங்க அது இயேசு இரத்தமுங்க – 2

நம்மை பரிசுத்தமாய் வாழ வைக்கும்

மீட்பின் இரத்தமுங்க – 2 – இரத்தமுங்க

உலர்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் தருமுங்க

தளர்ந்துபோன கைகளை திடப்படுத்துமுங்க – 2

வழிஞ்ச இரத்தமுங்க சிலுவையில்

பிழிஞ்ச இரத்தமுங்க – 2

அழிந்து போகும் ஆத்துமாவை

மீட்கும் இரத்தமுங்க – 2 – இரத்தமுங்க

எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்ட இரத்தமுங்க

வீணாய் தவிப்போரை தம்மண்டை

சேர்க்கும் இரத்தமுங்க – 2

மகிமை இரத்தமுங்க மறுரூப இரத்தமுங்க – எனை

மார்போடு அணைத்துக்கொள்ளும்

இயேசு இரத்தமுங்க – 2 – இரத்தமோ