நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆத்துமாவே நன்றி சொல்லு

Aaththumaavae Nanti Sollu

Fr. S. J. Berchmans

Key
C
Tempo
72
Time
3/4

ஆத்துமாவே நன்றி சொல்லு

முழு உள்ளத்தோடே- என்

கர்த்தர் செய்த நன்மைகளை

ஒருநாளும் மறவாதே - 2

குற்றங்களை மன்னித்தாரே

நோய்களை நீக்கினாரே

படுகுழியினின்று மீட்டாரே

ஜீவனை மீட்டாரே - 2

கிருபை இரக்கங்களால்

மணிமுடி சூட்டுகின்றார்

வாழ்நாளெல்லாம் நன்மைகளால்

திருப்தி ஆக்குகின்றார்

இளமை கழுகு போல

புதிதாக்கி மகிழ்கின்றார் - நம்

ஓடினாலும் நடந்தாலும்

பெலன் குறைவதில்லை - 2 - நாம்

கர்த்தர் தம் வழிகளெல்லாம்

மோசேக்கு வெளிப்படுத்தினார்

அதிசய செயல்கள் காணச் செய்தார்

ஜனங்கள் காணச் செய்தார்

அவரது பேரன்பு

வானளவு உயர்ந்துள்ளது

கிழக்கு மேற்கு தூரம்போல நம்

குற்றங்கள் அகற்றிவிட்டார்