நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆராய்ந்து பாரும் தேவனே

Aaraaynthu Paarum Thaevanae

ஆராய்ந்து பாரும் தேவனே

என்னை நீர் அறிவீர்

புதிதும் ஜீவனுமான பாதையில்

ஓடச் செய்யும்

உம் வார்த்தை கேட்டிடாமல்

குற்றங்கள் பல செய்தேன்

கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய்

என்னிலே வெளிச்சம் காட்டிடுமே

– ஆராய்ந்து

மார்த்தாளைப் போலிருந்தேன்

வீணாக உழைத்திட்டேன் நான்

தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன்

பாதத்தில் இருக்க கற்றுக்கொண்டேன்

– ஆராய்ந்து

வீண் வார்த்தை என் வாயினால்

நினைக்காமல் பேசுகின்றேன்

என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்

என் தூய வாழ்வை காத்துக்கொள்ள

– ஆராய்ந்து

உம் தூய ஆவியாலே

துர் ஆசை நீங்கச்செய்யும்

உண்மை மனசாட்சி என்னில் உண்டாக

உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்

– ஆராய்ந்து

சுயம் என்னில் சாக வேண்டும்

நீர் என்னில் பெருக வேண்டும்

என் சித்தம் விரும்பேன என்னையே பலியாய்

தந்தேன் உம் சேவை செய்திடவே!

– ஆராய்ந்து