பாடல்
ஆபிரகாமின் தேவனே
Aapirakaamin Thaevanae
Chandrasekaran
ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவரீரே
உம் நாமத்தோடவே
என் பெயரை இணையுமே
ஆனந்தம் அடைந்திடுமே – 2
தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயை கட்டினீரே – 2
தேவாதி தேவன் நீர் வாழ்க
இராஜாதி ராஜன் நீர் வாழ்க – 2
– ஆபிரகாமின்
சாத்ராக் மேஷாக்
ஆபேத்நேகோவை
அவியாமல் அக்கினியில் காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்
– ஆபிரகாமின்
பவுலும் சீலாவையும் சிறையினிலே
கட்டுகளை அறுத்து காத்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க
– ஆபிரகாமின்