பாடல்
ஆபத்து நாளில் கர்த்தர்
Aapaththu Naalil Karththar
Fr. S. J. Berchmans
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின் நாமம்
பாதுகாக்கின்றது
– ஆபத்து
என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
– ஆபத்து
எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்
– ஆபத்து
இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் - என்
ஏக்கம் எல்லாமே - என்
எப்படியும் நிறைவேற்றுவீர்
– ஆபத்து
வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே(இயேசு)
கொடியேற்றிக் கொண்டாடுவோம்
– ஆபத்து
திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்
– ஆபத்து