பாடல்
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
Aanndavarai Ekkaalamum Pottiduvaen
Fr. S. J. Berchmans
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்…
ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
– நடனமாடி
அவரை நோக்கிப் பாத்ததால் பிரகாசமானேன்
எனது முகன் வெட்கப்பட்டுப் போகவேயில்ல
– நடனமாடி
ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
– நடனமாடி
கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
– நடனமாடி
சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
– நடனமாடி