ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
Aanndavar Aalukai Seykintar
Fr. S. J. Berchmans
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே
திருமுன் வாருங்கள்
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க
இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க
எக்காள தொனி முழங்க
இப்போது துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து
வேந்தனை துதியுங்கள்
– ராஜாதி
துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் உயர்த்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
– ராஜாதி
ஓசையுள்ள கைத்தாளத்தோடு
நேசரை துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே,
இயேசுவை துதியுங்கள்
– ராஜாதி
நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,
என்றென்றும் நம்பத்தக்கவர்
– ராஜாதி
இயேசுவே நம் இரட்சகர்
என்று முழங்கிடுங்கள்
அவர் நமக்காய் ஜீவன் தந்தார்
அவரின் ஆடுகள் நாம்
– ராஜாதி
நடனத்தோடும் தம்புரோடும்
நாதனைத் துதியுங்கள்
மத்தளத்தோடும் குழல் ஊதி
சப்தமாய்த் துதியுங்கள்
– ராஜாதி