நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆண்டவர் ஆலயம் ஆராதனை

Aanndavar Aalayam Aaraathanai

Sirkali Yesuprakasam

ஆராதனை ஆராதனை ஆராதனை

ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை

அவருடன் இணைக்கும் அன்பின் கணை

பொங்கும் இதயம் சிரிக்கட்டுமே

அவர் புகழை எந்நாளும் உரைக்கட்டுமே

ஏங்கும் இதயம் உணரட்டுமே அங்கு

ஓங்கும் கிருபைகள் தாங்கட்டுமே

– ஆண்டவர்

நாமமே இயேசுவின் ஆலயமாம்

அவர் நாடும் நல்ல இருப்பிடமாம்

தூய தேவனைத் துதித்திடுவோம் அவர்

தேவ ஆவியால் நிரப்பிடுவார்

– ஆண்டவர்

ஆவியோடும் உண்மைடும் ஆராதிப்போம்

நான் ஆனந்தமாய் ஆர்பரித்து ஸ்தோத்திரிப்போம்

புத்தியுள்ள பக்தியாலே கர்த்தர் இயேசுவை நித்தம்

நித்தம் போற்றியே துதித்திடுவோம்

– ஆண்டவர்