நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் இயேசு ஆனந்தமே

Aanantham Aanantham Aanantham Yesu Aananthamae

Sirkali Yesuprakasam

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

இயேசு ஆனந்தமே

என்னையும் மீட்ட இன்ப நல்

இயேசு எனக்கு ஆனந்தமே

என் பாவம் போக்கினார்

என்னையும் நேசித்தார்

தன் ஜீவன் எனக்கு தந்து

என்னையும் மீட்டிட்டார்

எத்தனையோ பாவங்கள்

நான் செய்த போதிலும்

அத்தனையும் எண்ணாமல்

என்னையும் நேசித்தார்

பரிசுத்தர் என் இயேசு பரிசுத்தர்

என்னையும் மீட்க தன்னையே

தந்த இயேசு பரிசுத்தர்

என் பாவம் போக்க தன்னையும்

ஈந்த இயேசு பரிசுத்தர்

என் பாவம் போக்கினார்

என்னையும் நேசித்தார்

தன் ஜீவன் எனக்கு தந்து

என்னையும் மீட்டிட்டார்

– ஆனந்தம்

அந்நியனாய் நானிருந்தேன்

சொந்தமாய் மாற்றினார்

அநீதி பல செய்தேன்

நீதிமான் ஆக்கினார்

நீதி பரர் என் இயேசு நீதி பரர்

ஆதி அந்தமில்லா தேவாதி தேவன்

இயேசு நீதிபரர்

அன்பே உருவாகி இவ்வுலகம்

வந்த என் இயேசு நீதிபரர்

என் பாவம் போக்கினார்

என்னையும் நேசித்தார்

தன் ஜீவன் எனக்கு தந்து

என்னையும் மீட்டிட்டார்

– ஆனந்தம்

மண்ணான மனிதனுக்கு

மகிமை தந்தார்

மாறாத மெய் அன்பை

நம் மேல் பொழிந்தார்

விண்ணரசர் என் இயேசு விண்ணரசர்

விண்ணகம் விட்டு மண்ணகம்

வந்த என் இயேசு விண்ணரசர்

மண்ணகம் விட்டு விண்ணகம்

சேர்க்கும் என் இயேசு விண்ணரசர்

என் பாவம் போக்கினார்

என்னையும் நேசித்தார்

தன் ஜீவன் எனக்கு தந்து

என்னையும் மீட்டிட்டார்

– ஆனந்தம்