பாடல்
ஆனந்த களிப்புடனே
Aanantha Kalippudanae
Reegan Gomez
ஆனந்த களிப்புடனே – என்
அப்பாவை போற்றிடுவேன் – என்
ஜீவிய காலமெல்லாம் இயேசு
ராஜாவை உயர்த்திடுவேன்
பாடுவேன் இயேசு ராஜனை
போற்றுவேன் இயேசு ராஜாவை
என் வாழ்வின் இன்பம் இயேசு தான்
என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான்
சிலுவையில் இயேசு மரித்தார்
என் பாவம் போக்கிடவே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்
என்னோடு வாழ்ந்திடவே
– பாடுவேன்
முழங்கால் யாவும் முடங்கும்
இயேசுவின் நாமத்தினால்
பாதால சேனைகள் நடுங்கும்
இயேசுவின் நாமத்தினால்
– பாடுவேன்
நுகங்கள் முறிந்து போகும்
உன்னதரின் அபிஷேகத்தால்
ஆற்றலோ சக்தியோ அல்ல
ஆவியால் எல்லாம் ஆகும்
– பாடுவேன்