ஆலயத்துக்கு நேரமாச்சி கௌம்பலையா?
Aalayaththukku Naeramaachchi Kaumpalaiyaa?
Moses Rajasekar
ஆலயத்துக்கு நேரமாச்சி கௌம்பலையா?
நம்ம ஆண்டவரை பார்க்க மனம் துடிக்கலையா?
ஆராதனைக்கு நேரமாச்சு கௌம்பலையா?
நம்ம ஆண்டவரை பார்க்க மனம் துடிக்கலையா?
இயேசு வந்திருக்காரு
உன்ன பார்க்க துடிக்கிறாரு
பாஸ்டர் வந்திருக்காரு
பேச துடிக்கிறாரு ஆலயம் தேவாலயம்
ஆலயம் தேவாலயம்
திங்கட்கிழமை குடும்ப ஜெபம்,
செவ்வாய்கிழமை கூட்டு ஜெபம்
புதன்கிழமை வேதபாடம்,
வியாழக்கிழமை வீட்டு ஜெபம் 2
வெள்ளிக்கிழமை உபவாசம்,
சனிக்கிழமை காத்திருப்பு
ஞாயிற்றுக்கிழமை ஆண்டவரை
பார்க்க மனம் துடிக்கலையா?
ஆலயம் தேவாலயம்
– ஆலயத்துக்கு
அந்தி சந்தி மதிய நேரம்
சூரியன் உதயமாகும் நேரம்
சாயங்கால பொழுது நேரம்
அதிகாலை விடியும் நேரம் – 2
ஆபத்து கால நேரம்
அழுது புலம்பும் இழப்பு நேரம்
ஆண்டவரின் பாதத்தில்
அமர மனம் துடிக்கலையா?
ஆலயம் தேவாலயம்
– ஆலயத்துக்கு
ஆரம்ப ஜெபம் முதல் முடிவு
ஜெபம் முடியும் வரை
ஆயத்தமாய் முன்னின்று
அவர் சமூகம் காத்திருப்பேன்
விழித்திருந்து தினம் ஜெபித்து
வேதத்தை தியானித்து
ஆண்டவரின் முகம் கண்டு
ஆனந்தமாய் காத்திருப்பேன்
ஆலயம் தேவாலயம்
– ஆலயத்துக்கு