நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா

Aalam Akalam Neelam Uyaram Theriyumaa

Moses Rajasekar

ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா – நம்

ஆண்டவரின் அன்புக்கீடாகுமா

கோடி தந்து அதைப்பெற முடியுமா

அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை

தெரியுமா – 2

அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு

நிலையான அன்பு அது நேர்மையான அன்பு

உண்மையான அன்பு அது உறுதியான அன்பு

கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு

அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு – ஆழம்

சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு

தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு

பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு – 2

ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு – 2

அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு

– ஆழம்

ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு

உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு – 2

கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு – 2

இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பும் – 2

அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு

– ஆழம்