நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆகாதது எதுவுமில்லை

Aakaathathu Ethuvumillai

Fr. S. J. Berchmans

ஆகாதது எதுவுமில்லை – உம்மால்

ஆகாதது எதுவுமில்ல

அகிலம் அனைத்தையும்

உண்டாக்கி ஆள்கின்றீர்

துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்

வெட்டுண்டு மடியச் செய்தீர்

உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் – 2

அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று

நடந்தானே இயேசு நாமத்தில்

… உம்மால்

கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு

பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்

… உம்மால்

கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை

கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்

… உம்மால்

ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று

இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே

… உம்மால்

எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்

எண்ணெய் மாவு குறையவில்லையே

… உம்மால்

ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே

சேதமின்றிக் காப்பாற்றினீர்

… உம்மால்

கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்கூம் சிறுவனங்கே

சுகமானான் அந்நேரமே

… உம்மால்

தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்

திராட்சை ரசம் வந்ததையா

… உம்மால்