பாடல்
ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள்
Aadungal Konndaadungal Ithu Aayan Piranthanaal
Sirkali Yesuprakasam
ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
ஆயன் பிறந்தநாள்
பாடுங்கள் பண்பாடுங்கள்
தேவ பாலன் பிறந்தநாள்
மரியின் மடியில் மாடடைக்குடிலில்
இறைமகன் இயேசு பிறந்தநாள்
அந்த திருமகன் தனக்கு அனைவரும்
சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்
– ஆடுங்கள்
நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
குழந்தையாய் இயேசு பிறந்த நாள்
– ஆடுங்கள்