நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆச்சர்யமே! அதிசயமே

Aachcharyamae! Athisayamae

ஆச்சர்யமே! அதிசயமே

ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம்

செங்கடல் இரண்டாய் பிரிந்து போக

சொந்த ஜனங்களை நடத்தினாரே

இஸ்ரவேலின் துதிகளாலே

ஈன எரிகோ வீழ்ந்ததுவே

– ஆச்சர்யமே!

ஏழு மடங்கு எரி நெருப்பில்

ஏழை தம் தாசருடன் நடந்தார்

தானியேலை சிங்கக் கெபியில்

தூதன் துணையாய் காத்தனரே

– ஆச்சர்யமே!

பனிமழையை நிறுத்தினாரே

பக்தன் எலியா தன் வாக்கினாலே

யோசுவாவின் வார்த்தையாலே

ஏகும் சூரியன் நின்றதுவே

– ஆச்சர்யமே!

மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்

மாபெலன் தேவனிடம் அடைந்தான்

வீழ்த்தினானே கோலியாத்தை

வீரன் தாவீது கல் எறிந்தே

– ஆச்சர்யமே!

நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்

நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே

தம்மை நோக்கி வேண்டும் போது

தாங்கி நம்மை ஆதரிப்பார்.

– ஆச்சர்யமே!