நேசிக்கிறேன்
← திரும்பு
articles

மீன் தந்த ஆசைகள்

Jenophene Abraham

ஒரு மனிதன் தன் விடுமுறை நாளில், மீன் பிடிப்பதற்காக சென்றான். அப்போது ஒரு அழகிய மீன் அவனுடைய தூண்டிலில் சிக்கியது. அதைப் பார்த்து, அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த மீன் பேச ஆரம்பித்தது, 'தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், நான் உங்களுடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றுகிறேன்' என்று சொன்னது. அப்போது அந்த மனிதன், 'இல்லை, எனது ஐந்து ஆசைகளை நிறைவேற்று, நான் உன்னை விட்டு விடுகிறேன்' என்றுக் கூறினான். அதற்கு அந்த மீன், 'எனக்கு மூன்று ஆசைகளை நிறைவேற்றதான் சக்தி இருக்கிறது' என்று சொன்னது, அப்போது அந்த மனிதன், 'இல்லை, எனக்கு நாலரை ஆசைகளையாவது, நிறைவேற்ற வேண்டும்' என்று திரும்ப பேரம் பேசினான். 'ஓ, என்னால் மூன்றுதான் முடியும் என்று சொன்னேனே, தயவு செய்து என்னை விட்டுவிடு' என்று அவனிடம் கெஞ்சியது. ஆனால் அந்த மனிதனோ, 'சரி, குறைந்த பட்சம் நான்காவது கொடு' என்று சொல்லி முடிப்பதற்குள் இந்த மீன் அவனது கைகளிலேயே மடிந்துப் போனது. அவன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பேரம் பேசியே நழுவ விட்டான்.

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.