நேசிக்கிறேன்
← திரும்பு
articles

அடையாளம் பெற்றவனாயிரு!

Jenophene Abraham

கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். எசேக்கியேல்: 9 - 4

நம்மை சுற்றி நடக்கிற காரியங்களை அறியும்போது அதற்காக பரிதபிக்கிறவர்களாக இருக்கிறோமா? தேசத்தில் எங்கும் காணப்படும் அருவருப்புகளை குறித்து கர்த்தரிடம் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷனாக இருக்கிறோமா? என்பதை சற்று சிந்திக்கிறவர்களாக இருப்போம்.

தரிசனம் பெற்றவர்கள் என்று சொல்லும் நாம் தேவனால் கொடுக்கப்படும் அடையாளத்தை பெற்றவர்களாக இருக்கிறோமா? இன்று தேவன் கிருபையாய் கொடுத்திருக்கும் தருணத்தை நழுவவிடாதிருங்கள். பாவங்களில் மரித்து போய்க் கொண்டிருக்கும் ஜனங்களுக்காக கர்த்தரிடம் மன்றாடுகிறவர்களாக இருப்போம், இல்லையேல் அவர்களுக்காய் நியமிக்கப்படும் அதே கோபாக்கினையை நீயும் பெற்றுக்கொள்வாய்.

பிறருக்காக தேவனிடம் மன்றாடுகிற உனக்கு தேவனால் அடையாளம் போடப்படும். தேவனால் அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனுக்கும் அவரால் நியமிக்கப்பட்ட கோபாக்கினை வராது. கர்த்தரின் தீர்ப்பு பரிசுத்த ஸ்தலத்திலே துவக்கப்படும், அது ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவங்கும். பயப்படாதிருங்கள் அடையாளம் பெற்றவன் அழிக்கப்படுவதில்லை.

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.