நேசிக்கிறேன்
← திரும்பு
articles

வாழ்கையை கட்டுவீர்!

Jenophene Abraham

முதலாளி ஒருவரிடம் ஒரு வயதான தச்சர் (கார்பெண்டர்) ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த கார்பெண்டர் மிகுந்த திறமைசாலி. எந்த வேலை கொடுத்தாலும் மிகுந்த பொறுப்புடனும், மிக நேர்த்தியாகவும் செய்து கொடுப்பவர். ஆகவே, முதலாளிக்கு அந்த கார்பெண்டர் மீது தனி மரியாதையை இருந்து வந்தது. வயது முதிர்ந்த அந்த கார்பெண்டர் தன் வேலையிலிருந்து ஒய்வு பெற விரும்பினார்.

அவர் தன் முதலாளியிடம் சென்று தன் விருப்பத்தை கூறினபோது மிகுந்த வருத்தமடைந்தார் முதலாளி. பின் அக்கார்பென்டரை அழைத்து தனக்கு கடைசியாக ஒரு அழகிய மரவீடு ஒன்றை கட்டி தந்து விடும்படி கேட்டுக்கொண்டார். முதலாளியின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல விரும்பாத அக்கார்பெண்டர் சரியென்று ஒப்பு கொண்டார். ஆனாலும் இந்த வேலையை செய்வதால் தனக்கு பெரிதாக ஒரு லாபமும் கிடைக்கப்போவது இல்லை என்பதை அறிந்த கார்பெண்டர் மிகுந்த கவனக்குறைவுடனேயே அவ்வேலையில் ஈடுபட்டு வந்தார். ஏனோ தானோவென்று கட்டி வந்தாலும் அவ்வீடு ஒரு நாள் நிறைவடைந்தது. வீட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்த முதலாளி, "இந்த வீடு உங்களுக்காக கட்டப்பட்டது" இதை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று வீட்டின் சாவியை கொண்டு வந்து கொடுத்தார். அந்தக் கார்பெண்டர் தனக்குத் தான் அந்த வீடு என்பதை அறிந்து இருந்தாரானால் தன் திறமை முழுவதையும் உபயோகித்து சிறந்த ஒரு வீட்டை உருவாக்கி இருப்பார். முதலாளிக்கு தானே என்று அவர் அலட்சியமாக கட்டின வீட்டில் இன்று இவரே குடியேற வேண்டியதாகிப் போனது.

அது போல தான் நம் வாழ்வில் இன்று நாம் எடுக்கும் தீர்மானங்கள், நாம் செய்யும் செயல் எல்லாமும் தன் நாளை நாம் குடியேரப்போகும் நம்முடைய வாழ்க்கையாகிய வீட்டை கட்டப் போகின்றன என்பதை உணர்ந்து செயல் படுவோம்.

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.